கிராம்பு அதிகம் பயன்படுத்தினால் ஆபத்தா? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
நறுமணம் தரும் மசாலா பொருட்களில் முக்கியமாக இருக்கும் கிராம்பு அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக மற்றும் பாதக பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
கிராம்பு
பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தப்பட்டு வரும் கிராம்புவில் வைட்டமின் சி, கே, இ, கால்சியம், மெக்னீசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.
ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ள கிராம்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்ததாகவும் உள்ளது.
நன்மைகள் என்ன?
புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும், நுரையீரலுக்கு பாதுகாப்பாகவும் செயல்படுவதுடன், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது.
கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்புப் பண்புகள் இருப்பதால் பாக்டீரியாக்களை நீக்கி பல்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்புகளை சாப்பிட்டு வெந்நீர் குடித்தால், அஜீரணம் மற்றும் மலச்சிக்ல் அகன்று குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
காது வலி, தொண்டை வலிக்கு நிவாரணம் அளிப்பதுடன், கை, கால் நரம்புகள் பலத்துக்கும், வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையை சீராக்குகிறது.
தீமைகள் என்ன?
கிராம்பு அதிக ஆரோக்கிய நன்மையை அளித்தாலும், அதிகமாக உட்கொள்ளும் போது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.
கிராம்பை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இரைப்பை, குடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. மேலும் வயிற்று பிரச்சனை, வயிற்று போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையும் ஏற்படலாம்.
கிராம்பு இயற்கையாகவே ரத்தத்தை எளிதாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதனால் காயம் ஏற்படும் போது ரத்தப் போக்கு விரைவில் நிற்காமல் இருக்கும்.
அடிக்கடி ஒவ்வாமை எதிர்விளைவுகள் காணப்பட்டால் கிராம்பு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மிகக்குறைவாக எடுத்துக் கொண்டால் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது.
கிராம்புவில் காணப்படும் மூலக்கூறுகள் அலர்ஜியை அதிகப்படுத்தி, சருமத்தில் சொறி அல்லது அரிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |