கொலஸ்ட்ரோலை குறைக்க முடியாமல் பெரும்பாடு படுகிறீர்களா? அப்போ வெறும் வயிற்றில் இந்த நீரை குடிங்க!
இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே.
தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.

நாம் கடைகளில் விரும்பி சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அதிக கொழுப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும், இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
அதனை முறையாக பின்பற்றினால் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம்.
கொலஸ்ட்ரோலை குறைக்க
இலவங்கப்பட்டையானது ஆரோக்கியத்திற்கு அருமருந்தாகிறது. மேலும் தோல் தொடர்பான நோய்களை வர விடாமல் தடுக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சக்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.
இந்த இலவங்கப்பட்டையானது கொலஸ்ட்ரோல் உள்ளவர்களுக்கு எப்படி உதவுகிறது என்றால்
இலவங்கப்பட்டையை நன்றாக அரைத்து பொடி செய்து தினமும் காலை வேலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரோல் சடுதியாக குறையத் தொடங்கி விடும்.