ஒர்க் அவுட் செய்த பிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - எச்சரிக்கும் மருத்துவர்கள்
பிரபல காமெடி நடிகருக்கு ஜிம்மில் பயிற்சி மேற்கொண்ட போது திடீர் மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா இன்று காலை புது தில்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கீழே சரிந்து விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தற்போது அவர் நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
எச்சரிக்கை
ஆர்வக் கோளாறில் ஜிம் சேர்ந்து ஒரு வாரம் உற்சாகமாக சென்று அத்தோடு ஜிம்முக்கு டுக்கா விடுபவர்கள்தான் அனேகம் பேர்.
உண்மையில் முதல் முறை ஜிம் செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன? அவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? என்பது பற்றி பார்க்காலம்.
ஜிம்மில் சேர்ந்து ஒரே மாதத்தில் அடித்துத் தூக்க வேண்டும் என்பது பலரது கனவு. அதனால் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்வார்கள்.
வருடக் கணக்கில் எந்த வேலையும் கொடுக்காமல் உடம்பை சுகவாசியாக வைத்திருந்துவிட்டு, திடீரென ஹெவியாக வேலைக் கொடுத்தால் அது பாவம், என்னத்துக்கு ஆகும்?
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" அது உடல் பயிற்சிக்கும் நன்றாக பொருந்தும். ஜிம் பயிற்சியாளர்கள் ஆலோசனையோடு மட்டுமே அதீத பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்படி பயிற்சிகள் மேற்கொள்ளும் போது, உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.
இல்லையெனில் உடல் சோர்வு, மயக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
தொடர்ந்து உடல்பயிற்சி செய்யும் போது உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ள நேரம் ஒதுக்குவது அவசியம். எனவே பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் நிபுணர்களின் உதவியோடு பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சரியான ஆலோசனை இன்றி, இடைவிடாது பயிற்சி மேக்கொள்ளும் பட்சத்தில் மயக்கம், மாரடைப்பு, உடல் சோர்வு, போன்றவை நேர வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.