வாழைப்பழத்துடன் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும்? இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்!
பொதுவாக சில உணவுகளுடனும் அல்லது பழங்களுடனும் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிடுவதால் பல தீமையான விளைவுகள் தான் ஏற்படும்.
தயிரை சாப்பிட்டால்
தயிரானது உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கவல்லது. தயிர் சாப்பிடுவதானால் வெயில் காலங்களில் உணவு செரிமானத்தை சீராக்கும், மேலும் உடல் சூட்டைத் தவிர்த்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
தினமும் உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் இதய நோய் பாதிப்புகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.
தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் இது பெரிதும் உதவுகிறது. மேலும், தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கும் உதவும்.
இது மட்டுமல்லாமல் தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.
வாழைப்பழத்துடன் தயிர்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைய அடங்கியுள்ளதால் நமக்கு இன்ஸ்டன்ட் எனெர்ஜி கிடைக்கிறது. மேலும் வாழைப்பழத்தில் பலவிதமான வைட்டமின்களும் அடங்கியிருப்பதால் அது உங்கள் உடலுக்கு பல சத்துக்களை கொடுக்கும்.
அதே போல வாழைப்பழத்துடன் தயிரை சேர்த்து சாப்பிட நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.
- நார்ச்சத்து மற்றும் நல்ல பாக்டீரியா தயிரில் உள்ளதால் கால்சியம் உறிஞ்சுதல் செய்யப்படுகிறது.
- காலை உணவில் வாழைப்பழம் மற்றும் தயிர் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் எலும்புகளை வலுப்படுத்தி எலும்பு பிரச்சினை வராமல் தடுக்கும்
- வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்துக் கொண்டால், அது கொழுப்பை எரிக்க உதவும்
- வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது
- வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்துக் கொண்டால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.