வெறும் 10 நிமிடத்தில் ஆரோக்கியமான காலை உணவு! ரொம்ப ஈஸியாம்
பொதுவாக காலைஉணவு என்பது மனிதர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான தேவையாகும். இரவு முழுவதும் நீண்ட இடைவேளைக்கு பின்பு காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆனால் சிலர் பரபரப்பான வேலைப்பளு காரணமாக காலை உணவினை தவிர்த்து வருகின்றனர். இந்த தவறு பெரும் உடல்நல பாதிப்பில் கொண்டு போய்விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
நீங்கள் வழக்கமாக செய்யும் காலை உணவுகளை விட வெறும் 10 நிமிடத்தில் ஆரோக்கியமான உணவினை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு : 2 கப்
ரவை : 2 டீஸ் பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு, சீரகம் - தேவையான அளவு
தண்ணீர் : 2 அரை கப்
வெங்காயம் - 2 பெரிய வெங்காயம்
கேரட், முட்டை கோஸ், குடை மிளகாய் : தலா அரை கப்
சாம்பார் பொடி: அரை டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை நன்கு கலந்து கொண்டு, 20 நிமிடங்கள் வைத்துக் கொள்ளவும்.
பின்பு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், குடை மிளகாய், வெங்காயம் இவற்றினை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து வதறக்கிக் கொள்ளவும். சற்று வதங்கியதும் இதன் மீது சாம்பார் பொடியை தூவி வதக்கவும்.
இறுதியில் இந்த வதக்கிய கலவையை மாவில் சேர்த்து நன்றாக கலந்து தோசை ஊற்றி சாப்பிடவும்.