மறந்தும் கூட தர்பூசணி சாப்பிட்டதும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!
Water Melon
Summer Season
By Rinosharai
வெயில் காலத்திற்கு இந்த தர்பூசணியானது பல நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் தர்பூசணி சாப்பிட்டதும் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.
தர்பூசணி
- தற்போது எங்கு பார்த்தாலும் வெயிலானது அடித்து விரட்டிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாக அனைவரும் நாடுவது தர்பூசணியைத் தான்.
- இதில் அதிகளவான நீர்ச்சத்து இருப்பதால் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்கும்.
- தர்பூசணியில் அதிக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது.
- தர்பூசணியானது முடிக்கும் சருமத்திற்கும் ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி மற்றும் பீட்டா கரோட்டின்களும் அதிகம் இருக்கிறது.
- தர்பூசணியில் இருக்கும் லைகோபின் நமது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்து ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கும்.
- பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.
தர்பூசணியோடு இதை சாப்பிடவே கூடாது
- தர்பூசணியோடு இதை சாப்பிடவே கூடாது தர்பூசணி சாப்பிட்ட பிறகு புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. அதாவது பயறு வகைகள், மீன்கள் மற்றும் அசைவ உணவுகள். இவை இரண்டையும் ஒன்றோக சாப்பிடும் போது செரிமானப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படும்.
- தர்பூசணி சாப்பிட்டப் பிறகு பால் குடிக்கவே கூடாது. தர்பூசணி சாப்பிட்ட 30 நிமிடம் கழித்து வேண்டுமானால் பாலை குடிக்கலாம். பாலும் தர்பூசணியும் ஒன்று சேர்ந்து வயிறை உப்புசம் மற்றும் வாயு பிரச்சினைகளைக் கொண்டு வரும்.
- தர்பூசணி சாப்பிட்டப் பிறகு முட்டையையும் முட்டையைக் கொண்டு செய்யப்பட்ட உணவையும் சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டும் வயிற்றுக்குள் சென்று உங்களுக்கு செரிமானப் பிரச்சினையையும் மலச்சிக்கலையும் கொடுக்கும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US