உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்க வேண்டுமா? இந்த ஒரு டீ போதும்
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே பாதிப்பில் இருந்து தப்பிக்க உதவியாக இருக்கிறது. தடுப்பூசி போட்டால் கூட தொற்று ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது மட்டுமே சிறந்த வாய்ப்பாக நம் முன் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. தினமும் ஒரே மாதிரியான கஷாயம், மூலிகை என்று சாப்பிடுவதற்கு பதில் வேறு வழிகளில் முயற்சி செய்யும் போது எந்த வித பிரச்னையும், சோர்வும் இன்றி ஆரோக்கியத்தை காக்கலாம்.
தேவையானவை:
தண்ணீர் அரை லிட்டர், இமாலய உப்பு சிறிதளவு, கால் டீஸ்பூன் ஓமம், கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், லவங்கம் 1, பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன், பட்டை பொடித்தது ஒரு டீஸ்பூன்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்த பிறகு எடுத்து வைத்த பொருட்களை அதில் போட வேண்டும். பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும். ஐந்து நிமிடங்களில் சாறு இறங்கிவிடும். அதன் பிறகு சூடாக அதை அருந்தலாம். ஹிமாலய ராக் உப்புக்கு பதில் தேன் கலந்தும் அருந்தலாம்.
பயன்கள்
சீரகம் செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பெருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்வு தரும். செரிமானத்தை மேம்படுத்தும். கல்லீரல், கணையம், சிறுநீரகம், மூளை, கர்ப்பப்பைக்கு வளு தரும்.
மஞ்சள் மிகச்சிறந்த ஆன்டிசெப்டிக், நுண்ணுயிரி எதிர்ப்பு திறன் கொண்டது. மேலும் நோய் எதிர்ப்பு செற்களைத் தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
பட்டை ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஃபங்கல் தன்மை கொண்டது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் உடலில் செல்கள் அளவில் ஏற்படும் அழற்ச்சியை சரி செய்ய உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
ஓமமும் கூட பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சுவாசப் பிரச்னைகளை போக்கி, காற்று நன்றாக சென்று வர துணை செய்கிறது. செல்கள் அளவில் ஏற்படக் கூடிய அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.