உடல் எடை குறைக்க அதிக சிரமமா? சோயா செய்யும் அற்புதம்
நீங்கள் உங்கள் அன்றாடம் உணவில் சோயாவை சேர்த்துக்கொள்வதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சைவ உணவுப் பிரியர்களே உங்களுக்கு புரதச்சத்து அதிகம் கிடைக்க சோயா சிறந்த உணவு பொருளாகவும். அதிக புரோட்டின் இருப்பதால், சிக்கன் போன்ற அசைவ உணவு உண்பவர்களுக்கு இது சிறந்த மாற்றாக விளங்குகிறது.
சோயா துண்டில் கோழியின் மார்பகத்தில் உள்ள புரதத்திற்கு சமமான அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாற நினைப்பவர்களுக்கும் சோயா சிறப்பான மாற்று உணவாகும்.
சோயாவில் புரதம் மட்டுமின்று, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
எனவே நீங்கள் உங்களுடைய அன்றாட உணவில் சோயாவை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
இதயத்திற்கு நல்லது:
சோயா துண்டுகளில் இருக்கும் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட உங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, சோயா உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.
புற்றுநோய்
சோயா புரதங்கள் பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஒரு பொருளைக் கொண்டிருக்கின்றன. இவை புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. குறிப்பாக, புரோஸ்டேட் புற்றுநோய், நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு இவை பரிந்துரைக்கப்படுகின்றன.
மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்கிறது
சோயா துண்டுகளில் காணப்படும் ஐசோஃப்ளேவோன்ஸ், ஒரு பைட்டோ ஈஸ்ட்ரோஜன், ஹாட் ஃப்ளாஷ்கள், மனநிலை மாற்றங்கள் போன்ற மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைக் குறைப்பதில் சோயா உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இரவு வியர்வை மற்றும் சோர்வு போன்ற பிற மாதவிடாய் அறிகுறிககளை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எடை இழப்பு
நார்ச்சத்து அதிகம் உள்ள சோயா, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கச் செய்கிறது. இதனால், அடிக்கடி சாப்பிடும் ஆர்வம் குறைவதால், உடல் எடையைக் குறைக்க சோயா உதவியாக இருக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்:
செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து போதுமான அளவு இருக்கிறது. சோயாவின் தரமான நார்ச்சத்தானது, உடலில் செரிமானத்தை அதிகரிகிறது. எனவே, இறைச்சியைப் போலவே, சோயாபீனும் கொழுப்பு நிறைந்திருக்கும். ஆனால் இறைச்சி போலல்லாமல், அது நிறைவுறா கொழுப்பு நிறைந்ததாக இருக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா துண்டுகள் நன்மை பயக்கும். சோயா துண்டுகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதற்கு உதவுகிறது.இதை இருக்கும், ஃபைபரின் ஒரு வளமான ஆதாரம் என்பதால், உடல் சர்க்கரையை குறைத்து எடை இழப்புப்பிற்கு உதவுகிறது.