ஒரே மாதத்தில் 5 கிரகங்களின் சேர்க்கை! அதிர்ஷ்டத்தை தட்டிப்பறிக்கும் 6 ராசியினர் யார்?
ஜோதிடத்தில் ஐந்து கிரகங்களின் சேர்க்கையினால் உருவாகும் பஞ்சக்கிரஹி யோகம் வரும் மே மாதத்தில் வரவுள்ள நிலையில் அதிர்ஷ்டத்தை பெறும் ஆறு ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
பஞ்சக்கிரஹி யோகம்
ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் என ஐந்து கிரகங்கள் ஒரே நேரத்தில் தனது நிலையை மாற்றுகின்றது.
இந்த மாற்றத்தினால் சில ராசியினரின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறுகின்றது. மே மாதத்தில் செவ்வாய் மேஷ ராசிக்கும், சுக்கிரன் மிதுன ராசிக்கும் மாறுகின்றனர்.
அதே பொன்று புதன் மற்றும் சூரியன் ரிஷப ராசிக்கும் மாற்றிகின்றது. மே மாத இறுதியில் புதன் தனது நிலையை மாற்றி மிதுன ராசிக்குள் நுழைகின்றார்.
இந்த நிலையானது சில ராசியினருக்கு தாக்கத்தினை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசியினருக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நிலை ஏற்படும். அவை எந்தெந்த ராசி என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான், வரும் மே 11ம் தேதி தனது சொந்த ராசிக்கே பெயர்ச்சி அடைவதால், மேஷ ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏ்றபடுவதுடன், வருமானம் இரண்டு மடங்கு அதிகரிக்கின்றது.
நண்பர்களின் உதவி கிடைப்பதுடன், அலுவலகத்திலும் உயர் அதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வு, சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் உயரும்.
வாய்ப்புகள் புதிதாக தேடி வருவதுடன், வேலை வேறு இடத்திற்கு மாறுவதற்கு நினைப்பவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்பும் கிடைக்கும்.

கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு மே மாதத்தில் மிகவும் சாதாகமான நிலை இருக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைப்பதுடன், எதிர்பாராத வாய்ப்புகளும் தேடி வருகின்றது.
கடின உழைப்பிற்கு சரியான ஊதியம் பெறுவதுடன், தொழில் மற்றும் வியாபாரம் செய்வர்கள் நல்ல வளர்ச்சியினைக் காணலாம்.

துலாம் ராசி
துலாம் ராசியினருக்கு மே மாதத்தில் ஐந்து கிரகங்களின் சஞ்சாரம் அற்புற பலனை அளிப்பதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு நன்மையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
சிலருக்கு வெளிநாட்டு வேலை தேடி வருவதுடன், புதிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகவும் செய்யலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதுடன், காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷப ராசி
ரிஷப ராசியினருக்கு மேம 15ம் தேதியன்று சூரியன் ரிஷப ராசிக்குள் பிரவேசிக்க உள்ளதால், இவை ஆரோக்கியத்தையும், தலைமை பண்புகளையும் கொடுக்கும். புதனும் அத்தருணத்தில் ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார்.
ரிஷப ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கையானது திடீர் முன்னேற்ற வாய்ப்பினை உருவாக்கும். அதுவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், சிலருக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

சிம்ம ராசி
சிம்ம ராசியினர் மே மாதத்தில் செல்வ செழிப்பை பெறுவதுடன், இதுவரை பட்ட கஷ்டத்திற்கு சரியான பலன் கிடைக்குமாம். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க செய்வீர்கள்.
புதிய விடயத்தினை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவும் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள், பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசி
மிதுன ராசியின் அதிபதியான புதுன் மே 29ம் தேதி தனது சொந்த ராசியினலேயே பிரவேசிக்கின்றார். சுக்கிரம் மே 14ம் தேதி மிதுன ராசியில் பிரவேசிப்பதால், குறித்த ராசியினருக்கு அதிர்ஷ்டமான நேரமாக இருக்கின்றது.
புதிய தொழில் இந்த நேரம் சாதகமான நேரமாகவும், அரசு வேலைக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும். முழுபயனை பெறுவதுடன், கணிசமான நிதி ஆதாயத்தினையும் பெற வாய்ப்பு உள்ளது. கடந்த கால முதலீடு லாபமாகவும், வெளிநாடு செல்ல வாய்ப்பும் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |