தர்பூசணியை அதிகமா சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சினை வருமாம்
தர்பூசணியில் 90% தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது.
வைட்டமின்கள்
வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், தாதுப்புக்கள் பீட்டா கரோட்டீன் அடங்கியுள்ளன. அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.
பக்கவிளைவு என்ன?
தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது இதயப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால், உடல் அதீத சோர்வடையும். கை, கால் உடல் வீக்கப் பிரச்சினைகள் உண்டாகும்.
ஆல்கஹால் அதிகம் எடுத்துக் கொள்கிறவர்கள் தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அதிகம் எடுத்துக் கொண்டால் அது கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்புப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
ராஜயோகத்தை தட்டித்தூக்கும் ராசிகள் யார்?
தர்பூசணி அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனால் நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தர்பூசணியை மிகக் குறைவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அதிலுள்ள கார்கோஹைட்ரேட் உங்களுக்கு வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தும். வாயுத்தொல்லையையை ஏற்படுத்துவதோடு செரிமான ஆற்றலைக் குறைத்து அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும்.
தர்பூசணி விதையை லேசாக வறுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படியில்லாமல் காய்ந்த விதைகளையோ அல்லது பச்சையாகவோ அதிகம் சாப்பிட்டுவிட்டால் டயேரியா ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.