அரை மணிநேரத்தில் செரிமான பிரச்சனையை சரிசெய்யும் அற்புத பானம்!
பொதுவாக சிலருக்கு அதிக செரிமாண பிரச்சினை இருக்கும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
இதனால் உடல் சோர்வு, உட்சாகமின்மை, பசியின்மை மற்றும் குமட்டல் என பல பிரச்சினைகளை ஏற்படுகிறது.
இது போன்ற பிரச்சினைகள் தேவையற்ற நேரங்களில் உணவு உட்கொள்ளல், கடைகளில் இருக்கும் உணவுகளை உட்க்கொள்ளல், காலநிலை மாற்றம் மற்றும் போதியளவு தண்ணீர் உடலில் இல்லாமையினால் ஏற்படுகிறது.
அந்த வகையில் இவையனைத்தையும் கட்டுபடுத்தும் ஒரு அற்புத பானம் எவ்வாறு தயாரிப்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர் -ஒரு டம்ளர்
சோம்பு - 1 மேசைக்கரண்டி
விளக்கெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைப்பழம் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து விட்டு அதனை மிக குறைந்த தணலில் சூடாக விட்டு பின்னர் அதில் ஒரு டம்ளர் நீரை விட்டு நன்றாக சூடாக்க வேண்டும்.
பின்னர் கொதிநீருடன் ஒரு கரண்டி சோம்பு/சீரகம் விட்டு ஒரு கொதி வந்ததும் இதனை இறக்கி, சூடு சற்று தனிந்ததும் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு மேசைக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சைப்பழச்சாறு ஒரு மேசைக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் உப்பு சேர்ப்பது அவசியமில்லை தேவை ஏற்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
பானத்தின் பயன்கள்
மலச்சிக்கல் ஏற்படும் போது இந்த பானத்தை காலை மற்றும் இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். இதனை எடுப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை குணமடையும்.
வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியேறும்.
குடலியக்கம் சீறாகும்.
வயிற்றிலிருக்கும் சொருவுகள் இல்லாமாக்கப்பட்டு சமிபாட்டு செயற்பாடு சீர்ப்படுத்தப்படும்.
முக்கிய குறிப்பு
இந்த பானத்தை தினமும் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.