கிரீன் டீயை யரொல்லாம் குடிக்கவேகூடாது தெரியுமா? எச்சரிக்கை பதிவு
உடல் எடையை குறைக்க நினைத்து பலர் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இது மிகவும் ஆரோக்கியமான ஒன்று தான். ஆனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலர் பால் சேர்த்துக்கொள்வதை தவிர்த்து விட்டு கிரீன் டீயை மட்டும் குடித்து வருகின்றனர்.
ஒரு நாளைக்கு எத்தனை கிரீன் டீ குடிக்கலாம், யாரெல்லாம் குடிக்கவே கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தினமும் 2 முதல் 3 கப் கிரீன் டீ குடிக்கலாம். ஒருவேளை நீங்கள் அதிக கிரீன் டீ குடிப்பவராக இருந்தால் இரத்த சோகை, மலசிக்கல், வயிற்று எரிச்சல், குமட்டல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒரு நபருக்கு உணவில் இருந்து கிடைக்கும் இரும்பு உயிரை குறைக்கும் ஆற்றலை கொண்டது.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கிரீன் டீயின் அதிகப்படியான நுகர்வு கல்லீரல் செல்களில் சைட்டோடாக்ஸிக் விளைவை ஏற்படுத்தும் மற்றும் கல்லீரலை சேதப்படுத்தும். எனவே கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அதிகப்படியான கிரீன் டீ கிரீன் குடிக்கவே கூடாது.
அதுபோல, சர்க்கரை நோயாளிகள் ஆசைக்கு தினமும் ஒரு கிரீன் டீ குடிக்கலாம். குறிப்பிட்ட அளவை மீறி குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும் அபாயம் உள்ளது.