உடல் உப்பிசத்தை தடுக்க வேண்டுமா? அப்போ இனி உணவை தொட்டுக் கூட பார்க்காதீங்க!
நீங்கள் அதிகமாகவும், பசியில்லாத நேரத்தில் சாப்பிடுவதும், நேரம் தவறி சாப்பிடுவது தான் இந்த அஜீரண கோளாறு அல்லது சாப்பிட்ட பிறகு உப்புசம் ஏற்படுகிறது நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் கொலஸ்ட்ரால் உணவுகள் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இதனால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி வயிறு உப்பியதுபோல் இருக்கும்.
உடலில் வாயு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கும் ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாயு.
மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும்.
அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது.
தவிர்க்க வேண்டியவை
- அடிக்கடி புளித்த ஏப்பம் பிரச்சினை உள்ளவர்கள் காரமான உணவைத் தவிர்க்க வேண்டும்.
- சூடானாக அல்லது குளர்ச்சியாக பானங்களையும், உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
- சாப்பிட்ட பிறகு தேநீர் அருந்தக் கூடாது
- பால் உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்
- கோதுமை உணவுகளான ரொட்டி, தோசை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- பீன்ஸ், வெங்காயம், பூடு, போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
- பசிக்கும் போது மட்டும் அளவான உணவை மட்டும் உண்ண வேண்டும்.
- சாப்பிடும் போது உணவுகளை மென்று கடித்து உண்ண வேண்டும் இல்லையெனில் வெளியில் இருக்கும் காற்று வயிற்றுக்கும் போகும் காற்றும் உங்களை வயிற்றை நிரப்பி இன்னும் உப்பிசத்தை அதிகரிக்கும்.
- எண்ணெயில் பொரித்த இறைச்சி
- பாக்கெட்டுகளில் அடைத்த மசாலா அதிகமுள்ள உணவுகள்
- அதிகக் கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிடுதல்.