மூல நோயிலிருந்து விடுதலை வேண்டுமா? இவற்றை எல்லாம் மறந்தும் கூட தொட வேண்டாம்!
அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். ஒருவருக்கு மூல நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் மலச்சிக்கல் முதன்மை காரணமாக இருக்கிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.
கோடைக்காலத்தில் பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதை தடுக்கலாம். அந்தவகையில் பைல்ஸ் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் எந்தவகையாக உணவை தவிர்க்க வேண்டும் என இங்கு பார்ப்போம்.
சாப்பிட கூடாதவை சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள் அளவுக்கு அதிகமாக வாழைப்பழம், கேனில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள். கேனில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் கொழுப்பு அதிகமான பால் மற்றும் க்ரீம், கொழுப்பு அதிகமான யோகர்ட், க்ரீம் சீஸ், கண்டன்ஸ்டு மில்க் சிவப்பு மிளகாய், மிளகு கொழுப்பு நீக்கப்படாத முழு பால் நிறைந்த பானங்கள், க்ரீம் வகை பானங்கள், கேன் சூப்புகள் மற்றும் டப்பாவில் அடைக்கப்பட்ட சூப்புகள், மது, கார்போனேட்டட் பானங்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கானாங்கெளுத்தி மீன், சுறா . க்ரீம், பாமாயில், தேங்காய் எண்ணெய், வெண்ணெய் பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் உணவுகள், ஊறுகாய், செயற்கை சுவையூட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தினமும் கடைபிடிக்க வேண்டியவை தினமும் சரிவிகித உணவு முறையை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்ண வேண்டும்.
பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
உணவுகளைத் தவிர்க்கக்கூடாது. குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கக்கூடாது.தினமும் தவறாமல் குறைந்தது 8-10 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். தினமும் அதிகளவு நீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.