மிக விரைவில் உடல் எடை குறைக்க ஆசையா? அப்போ இந்த டீயை தினமும் குடிங்க! ஒரே நாளில் அதிசயம் நடக்கும்
உடல் ஆரோக்கியமாகவும், பலம் மிகுந்ததாகவும் இருப்பதற்கும் பல விதமான உணவுகளை சாப்பிடுகிறோம். உணவுகள் எந்த அளவிற்கு சாப்பிடுகிறோமோ உடலுக்கு நலத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் சில வகையான பானங்களையும் அருந்துகின்றோம். அப்படி உலகம் முழுவதும் இருக்கிற மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் பானமாக டீ அல்லது தேநீர் இருக்கிறது. இந்த தேநீரில் “கிரீன் டீ, பிளாக் டீ” போன்ற பல வகைகள் இருக்கின்றன.
தேயிலை ஒரு பசுமைத் தாவரம். இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பிளாக் டீ என்பது கருப்பு தேயிலையை இரசாயன கலவையில் ஆக்சிஜனுடன இணைக்கப்படும்போது தயாரிக்கப்படுவது. பிளாக் டீயில் 10% பாலிபீனால்கள் உள்ளது.
கடுமையான மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும். நமது தலைமுடி ஆரோக்கியமானதாகவும், வலுவானதாகவும் இருப்பதற்கு நமது உடலில் இருக்கும் ரத்தத்தில் ஆன்டிஆக்சிடண்டுகள் அதிகம் இருப்பது அவசியமாகும்.
பிளாக் டீ அருந்துபவர்களுக்கு அவர்களின் ரத்தத்தில் இந்த் ஆன்டிஆக்சிடண்டுகளின் உற்பத்தி அதிகரித்து அவர்களின் தலைமுடி உதிர்வை தடுக்கிறது. மேலும் தலைமுடிகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் அல்லது அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் சிறந்த ஒரு பானமாக பிளாக் டீ இருக்கிறது. இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது.
இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்று போக்கை குணப்படுத்த வயிற்று போக்கு, அல்லது குடலில் பிரச்சனை இருந்தால், இந்த தேநீர் குணப்படுத்த உதவும். இது வயிற்றில் இருக்கும் புண் அல்லது பிற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தி பிளாக் டீ சுரம், வயிற்று போக்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய் உண்டாக காரணமாக இருக்கும் வைரஸ்களை எதிர்கின்றது.
மேலும் இதில் அல்கைலாமைன் ஆன்டிஜென்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது. இதனால் ஆரோக்கியம் அதிகமாகின்றது. எலும்பு பலப்படுத்த இந்த தேநீரை தொடர்ந்து அருந்தி வந்தால், எலும்புகள் பலமாவதோடு, இணைப்பு திசுக்கலும் உருதியாகின்றது.
இது குறிப்பாக இந்த தேநீரில் இருக்கும் பைத்தோகெமிக்கல்களின் காரணமாக ஏற்படுகின்றது. அதனால், எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சர்க்கரை வியாதி சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு பிளாக் டீ குடித்தால் அந்த வியாதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
மலச்சிக்கல்
தினந்தோறும் இருமுறை மலம் கழிப்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அறிகுறியாகும். ஆனால் இன்று பலரும் தவறான உணவு பழக்கங்களால் ஒரு முறை மலம் கழிப்பதில் கூட சிக்கல் ஏற்படுகிறது. கடுமையான மலச்சிக்கலால் அவதி படுபவர்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வந்தால் தினமும் மலம்கழிக்கும் நிலை உண்டாகி மலச்சிக்கல் தீரும்.