வெறும் 4 ஏலக்காய் இப்படி பயன்படுத்துங்க! அழகை கெடுக்கும் தொப்பைக்கு நிரந்தர தீர்வு
ஏலக்காய் என்றாலே நறுமணம் தான் நினைவு வரும். அதனால் தான் பெரும்பாலான வீடுகளில் ஏலக்காய் ஆக்கிரமித்து உள்ளது.
பிரியாணி தொடங்கி பாயசம் வரை, ஏலக்காயை சேர்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ஏலக்காய்க்கு மகத்துவம் அதிகம்.
ஆனால் பலரும் அறிந்திராத ஒன்று ஏலக்காயில் உள்ளது. ஏலக்காயை தண்ணீரில் ஊற வைத்து அதன் நீரை குறைத்து உடல் எடையை குறைக்கலாம். குறிப்பாக இதில் உடலுக்குத் தேவையான எண்ணெய் சத்துக்கள் இருப்பதால், வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை இது கரைக்கிறது.
மேலும் ஏலக்காய் செரிமான சக்தியைத் தூண்டி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் அஜீரண கோளாறு ஏற்படாமல் தடுக்க முடியும். தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீரைக் குடித்து வந்தால் உங்கள் தொப்பையை எளிதில் கரைத்து விடலாம்.
தேவையான பொருட்கள்
ஏலக்காய் - 4-5
தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை
எடுத்து வைத்திருக்கும் 4 அல்லது 5 ஏலக்காயைத் தட்டி அதிலிருந்து விதைகளைத் தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இரவு முழுவதும் ஏலக்காய் விதை மற்றும் தோலைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.
காலையில் விதையுடன் நீரைப் பருகுங்கள். விதையைச் சாப்பிட விரும்பாதவர் அதை வடிகட்டி தண்ணீரைக் கூட பருகலாம்.