நயன்தாரா கணவனை மாற்றிய சிம்பு: என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் வளர்ச்சிக்கு சிம்புதான் காரணம் என அவரே ஒரு பேட்டியில் கொடுத்த தகவல் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
விக்னேஷ் சிவன்
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். முதல் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கவில்லை.
முயற்சியைக் கைவிடாமல் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரௌடி தான் என்றத் திரைப்படத்தை இயக்கினார்.
அந்தப் படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கு டபள் மகிழ்ச்சியைக் கொடுத்தது. முதலாவதாக அந்தப் படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது மற்றொன்று இத்திரைப்படத்தின் மூலம் தான் நயனும் விக்னேஷ் சிவனும் காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதற்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு நயன்தாராவை கரம்பிடித்து வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் தந்தையர் ஆகிவிட்டார்கள்.
விக்னேஷ் சிவனை மாற்றிய சிம்பு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் போடா போடி. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சிம்பு விக்னேஷ் சிவனை அதிகம் ஊக்கப்படுத்தியிருக்கிறாராம்.
மேலும், சிம்பு அதிகம் ஊக்கப்படுத்த தான் ஒரு பாடல்களை எழுத வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அவரின் அந்த ஊக்கம் தான் விக்ரம் வேதா , ரெமோ , நானும் ரவுடி தான், என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுக்க காரணமாக இருந்திருக்கிறது.