குழந்தைகளுக்காக இதையே விட்டுவிட்டாய்! நயன்தாராவின் உண்மையை உடைத்த கணவர் விக்னேஷ்
நடிகை நயன்தாரா குழந்தைகளுக்காக மேக்கப் போடுவதை விட்டுவிட்டதாக கணவர் விக்னேஷ் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா விக்னேஷ்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஜோடிகள் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமாகி 4 மாதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர்.
ஆம் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த இவர்கள் பின்பு பல சர்ச்சைகளில் சிக்கினர். பின்பு சில ஆதாரங்களை மருத்துவரிடமும், அதிகாரிகளிடமும் காண்பித்து தாங்கள் சட்டத்தினை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
நயனின் பிறந்தநாள்
இந்நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். குழந்தைகளை வைத்துக்கொண்டு எளிமையாக வீட்டில் கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியது.
கணவர் விக்னேஷ் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், உங்களுடன் இது என்னுடைய ஒன்பதாவது பிறந்தநாள் நயன் என்றும், கணவன் மனைவியாகவும், குழந்தைகளுடன் கொண்டாடும் இந்த பிறந்தநாளில் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார்.
குழந்தைகள் முகத்தை முத்தமிடுவதால் தற்போது மேக்கப் போடுவதை நிறுத்தியுள்ளீர்கள்... உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை, மகிழ்ச்சியும் இனிமேலும் இருக்கும். நான் பிரார்த்திக்கிறேன்....
என் அன்பான பொண்டாட்டி, தங்கமே, என்றும் என் உயிர், உலகம் உன்னை நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். நயன்தாரா மை லேடி சூப்பர் ஸ்டார் என்று பதிவிட்டுள்ளார்.