மகன்கள் குறித்து மனம்திறந்த விக்னேஷ் சிவன்! என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
இயக்குனர் விக்னேஷ் சிவன் முதன்முதலாக தனது இரட்டைக் குழந்தைகளைக் குறித்து பேசியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் 8 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், இந்த தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.
ஆம் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்ட இவர்கள், தற்போது குழந்தைகளுடன் அதிக நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.
மனம்திறந்த விக்கி
இந்நிலையில் தனது இரட்டை குழந்தைகள் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். முன்பு நயன்தாராவின் பிறந்தநாளில் அவரையும், அவர் குழந்தைகளுக்காக செய்த தியாகத்தையும் நினைத்து பாராட்டிார்.
விக்கி கூறுகையில், இரண்டு மகன்களுக்கு தந்தை என்பதை தன்னால் தற்போது வரை உணரமுடியவில்லைஎன்றும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரகத்தினை செலவிட்டு வருவதாகவும், தனது வாழ்வில் மிகப்பெரிய அதிரஷ்டங்களில் ஒன்றே தனது குழந்தைகளைக் குறித்து பேசியுள்ளார்.