வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த பிரபலங்கள் யார் யார்?
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரபலங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பிரபல நடிகை நயன்தாரா.
திருமணத்திற்கு பிறகு பிரபலங்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ளாது வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வது தற்போது அதிகரித்துவருகிறது.
அந்த வகையில் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட சினிமா பிரபலங்கள் பற்றி காண்போம்.
அமீர்கான்
அமீர்கான் பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்களில் ஒருவர். இவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான்
இந்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் கவுரி கான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களும் கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அவர் தான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்.
சன்னி லியோன்
பாலிவுட் மற்றுமின்றி கவர்ச்சியில் பலரின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை சன்னி லியோன்.
சன்னி லியோன், டேனியல் வைபர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
இவரும் சில காரணங்களால் வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர்.
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி -தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையான சமிஷா என்கிற மகளை கடந்த 2020-ம் ஆண்டு இந்த முறையில் பெற்றெடுத்துள்ளார்.
நயன்தாரா
இந்த வரிசையில் அடுத்த இடத்தை பிடித்துள்ளார் நயன். கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்ட நயன், விக்னேஷ் சிவன்.
தற்போது வாடகை தாயின் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
இவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.