வரலட்சுமி சரத்குமாருக்கு மகன் இருப்பது தெரியுமா? வெளியான காணொளியை நீங்களே பாருங்க
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி.
ஹீரோயினாக மட்டுமின்றி விஜய், விஷாலுக்கு வில்லியாகவும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவர் நடித்து வருகிறார்.
காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
‘தி லயன் கிங்’ படத்தில் முபாசா தனது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே வரலட்சுமியும் அந்த வீடியோவில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். இது தவிர அந்த நாய்க்குட்டிக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி உள்ளார்.
Introducing my son #guccivaralaxmi
— ????????? ??????????? (@varusarath5) May 30, 2021
Follow him on Instagram @guccivaraxmi pic.twitter.com/XKBZfdYg5A