கையில் குழந்தையுடன் இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன்.. குழப்பத்தில் ரசிகர்கள்; வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடமாக திருமணம் செய்யாமல் காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இதனையடுத்து, அடிக்கடி சமூக வலைத்தளத்தில், புகைப்படத்தை பதிவிடும் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் சேர்ந்து, ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள்.
மேலும், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா தனது திருமணம் விரைவில், ரகசியமாக நடைபெறும் என்றார்.
இதனிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார்.
இதில் சமந்தா, நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் பஸ்ஸில் படியில் நின்றவாறு பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. நயன்தாரா என்ன செய்தாலும் வைரல், இவர் எங்கு சென்றாலும் கூட்டம்.
அப்படித்தான் சமீபத்தில் புதுச்சேரியில் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சென்ற இவரை காண சொகுசு விடுதி முன்பாக ஒரு பெரிய கூட்டம் கூடியது.
இந்த நிலையில், நயன்தாரா கையில் குழந்தையுடன் விக்னேஷ் சிவன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து வேறு எந்தஒரு விவரம் தெரியவில்லை. குழந்தை யாருடையது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.