கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை: தரதரவென இழுத்துச் சென்றக் கணவன்...! வைரலாகும் வீடியோ காட்சி
சிம்பு திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சனா கானின் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
சிம்பு பட நடிகை
சிம்புவின் சிலம்பாட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் சனாகான். அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு தம்பிக்கு எந்த ஊரு, பயணம் போன்றத் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு படங்களில் சனா கான் நடித்திருக்கிறார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாவது போட்டியாளராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அதன்பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் 2020ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சயத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மோசமாக நடந்துக் கொண்ட கணவர்
இந்நிலையில் சனாகான் மற்றும் அவரது கணவர் இருவரும் மும்பையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சனாகானை அவரது கணவர் கையைப் பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துச் சென்றிருக்கிறார். அதுவும் கர்ப்பிணி என்றுக் கூட பார்க்காமல் சனாகானும் அவரது பின்னால் ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
கர்ப்பிணி என்றுக் கூட பார்க்காமல் இப்படியா இழுத்துக் கொண்டு செல்வது என்று சனாகானின் கணவரை அனைவரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.