அடுப்பில்லாமல் வாழைப்பழ புட்டிங் செய்ய தெரியுமா? இந்த பொருள் மட்டும் இருந்தால் போதுமாம்..
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறுவர்களுக்கு புடிங் என்றால் மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று.
இந்த புடிங் மதிய சாப்பாட்டிற்கு பின்னர் ஒரு சாலட்டாக சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் அடுப்பில்லாமல் எவ்வாறு புடிங் செய்வது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப
தேங்காய் துருவல் - கால் கப்
செவ்வாழைப்பழம் - 2
தயாரிப்பு முறை
முதலில் தேவையானளவு சிவப்பு நிறை அவலை எடுத்து அதனை சுமார் 10 நிமிடங்களுக்கு தண்ணீர் ஊற வைக்க வேண்டும். ஆனால் அவல் குலையும் பதத்திற்கு சென்று விட கூடாது.
இதன் பின்னர் அவலை எடுத்து நன்றாக பிழிந்து அதனை ஒரு சுத்தமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழம் என்பவற்றை சேர்க்கவும்.
இதனை தொடர்ந்து சேர்க்கப்பட்ட அனைத்து பொருட்களையும் நன்றாக கைகளை கழுவி விட்டு பிசைய வேண்டும்.
பிசைந்து உருண்டை பிடித்தால் ஆவலுடன் எதிர் பார்த்த சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் தயார்!