நாவுக்கு விருந்தான சாக்லேட் புடிங்... சுலபமாக செய்வது எப்படி?
சாக்லேட்டைப் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பாரோ? அள்ளி அள்ளி உண்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் உணவுப் பண்டங்களில் சாக்லேட்டும் ஒன்று.
அதிலும் சாக்லேட்டில் புடிங் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்? நாவுக்கு விருந்தான சாக்லேட் புடிங் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
பேக்கிங் கொக்கொ பவுடர் - 1/4 கப்
சாக்லேட் (துருவியது) - தேவையான அளவு
சோள மாவு - 2 மேசைக்கரண்டி
சீனி - 6 மேசைக்கரண்டி
பால் - 1 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1/2 கரண்டி
செய்முறை
முதலில் பேக்கிங் கொக்கோ பவுடர், சோள மாவு, சீனி அனைத்தையும் பாத்திரத்தில் கொட்டி கலந்து கொள்ளவும்.
பின்னர் அந்த கலவையில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகளில்லாமல் கரைக்க வேண்டும்.
அதற்கடுத்ததாக அதை அடுப்பில் வைத்து தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
கலக்கிய பின்னர் கலவை கெட்டியான பதத்துக்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கிளறவும்.
பின்பு கப்களில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்றாக குளிர்ந்தவுடன் துருவிய சாக்லேட்டை மேலே தூவி பரிமாறவும்.