மீன ராசிக்கு செல்லும் செவ்வாய்: வளர்ச்சியின் உச்சத்திற்கு செல்லும் 3 ராசியினர்
ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் மீன ராசிக்கு செல்வதால் அசுர வளர்ச்சியடையும ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய்
ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை துணிச்சல் ஆகியவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியாகிய செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான இடத்தில் இருந்தால், அவர் எதையும் செய்யும் தைரியசாலியாக இருப்பதுடன், அனைத்தையும் வெற்றியாகவும் மாற்றுவார்.

அதுவே பலவீன நிலையில் இருந்தால் அதிக தயக்கம் கொள்வார்கள். தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் செவ்வாய் ஏப்ரல் 2ம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைகின்றார்.
இவை சிறப்பான தருணமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் செவ்வாய் மற்றும் குரு இவை இரண்டு நட்பு கிரகங்களாக இருக்கின்றது. இரண்டு கிரகங்களும் தற்போது பெயர்ச்சியடைவதால், பல ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக அமையும்.
18 மாதங்கள் கழித்து மீன ராசிக்கு செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினர் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியில் செவ்வாய் 12ம் வீட்டில் இருப்பதால் இந்த ராசியினருக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைப்பதுடன், இலக்கை வெற்றிகரமாகவும் அடைய முடியும்.
புதிய முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.

தனுசு
செவ்வாய் தனுசு ராசியின் 4வது வீட்டில் இருக்கும் நிலையில், முழு ஆதரவும், அதிர்ஷ்டமும் கிடைக்கின்றது. நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதுடன், தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக அமையும். தாயின் ஆரோக்கியத்தில் சிறிது கவனமாக இருக்கவும். கடின உழைப்பு நல்ல பலனைக் கொடுக்குமாம்.
மீனம்
மீன ராசியில் செவ்வாய் முதல் வீட்டிற்கு செல்வதால் நிதி மற்றும் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தினை பெற முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தினை பெறலாம், பணிபுரிபவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
இத்தருணத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டுமாம். அவ்வாறு இல்லையெனில் பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |