உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சிவப்பு அவல் ரொட்டி!
சிவப்பு அவல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
- சிவப்பு அவல் - ஒரு கப்
- உருளைக்கிழங்கு - 2
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய்
- விழுது
- ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு,
- சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
- கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
- இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
- ரஸ்க்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அவலைச் சேர்த்து தண்ணீரில் அலசி, பிறகு 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் மற்ற பொருள்கள் பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) சேர்த்துப் பிசையவும்.
இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து தட்டையாகத் தட்டவும்.
இதை ரஸ்க்தூளில் புரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த அவல் மினி ரொட்டியைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
சத்தான அவல் ரொட்டி ரெடி.