ஐஸ்வர்யாவின் பேராசையால் வந்த வினை: அதிரடியாய் கைதாகும் கதிர்! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!
ஐஸ்வர்யாவின் பேராசையால் கண்ணனை அடித்த வங்கி அதிகாரிகளை தட்டிக் கேட்டு விளாசிய கதிரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தக் கதையில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாக பிரிந்து எல்லோரும் தனித்தனியே இருக்கின்றனர். முல்லையும் தனமும் மட்டும் தான் தற்போது வரை ஒன்றாக இருக்கிறார்கள்
கைதாகும் கதிர்
இந்நிலையில், தற்போது கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவால் கடனில் அடிப்பட்ட கண்ணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து கடனை திருப்பிக் கேட்கிறார்கள்.
இன்னும் கொஞ்சம் டைம் வேணும் என இழுத்தடித்துக் கொண்ட கண்ணனை வங்கி அதிகாரிகள் வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு போவதாக சொல்ல இல்லையென்றால் என வேற மாதிரி பேச ஆரம்பித்த அவர்களை அடித்திருக்கிறார் கண்ணன்.
இதனால் காசு கொடுக்க வக்கில்லை என கண்ணனை அடித்து தள்ளி விட்டு போய்விட்டார்.
நடந்ததை அப்படி அச்சுபிசறாமல் கதிரிடம் சொன்ன கண்ணன், கோபம் பொறுக்க முடியாமல் பேங்க்காரர்களை இரத்தம் வரும் அளவிற்கு அடித்திருக்கிறார்.
இதனால் கதிரை கைது செய்ய வீட்டிற்கு வந்த பொலிஸார் கதிரை இழுத்துக் கொண்டு செல்கிறார்கள் பொலிஸார்கள் இதனால் பதறிப்போய் இருக்கிறார் முல்லை.