விபத்தில் சிக்கப்போகும் கண்ணம்மா! ஹேமாவிற்கு தெரியும் உண்மை: பரபரப்பான திருப்பம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பல வித திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.
குறித்த சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்து வாழும் நிலையில், குழந்தைகள் ஒவ்வொன்றும் அப்பா, அம்மா என தனித்தனியாக வளர்ந்து வருகின்றனர்.
இதில் கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை லட்சுமிக்கு தனது தந்தை பாரதி என்று தெரிந்த நிலையில், இருவரும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிய ப்ரொமோவால் ஏற்பட்ட திருப்பம்
தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் கண்ணம்மாவை வில்லி வெண்பா லாரி ஏற்றி கொலை செய்வதற்கு கூறியுள்ளார். கண்ணம்மா போன் பேசிக்கொண்டு வந்துகொண்டிருக்கையில், பின்னே லாரி வருவதை அவதானித்த ஹேமா தனது பாட்டியிடம் கூறுகின்றார்.
உடனே செந்தர்யா கண்ணம்மா என்று அழைக்க ஹேமா பயங்கர ஷாக் ஆகியுள்ளார். ஆம் தனது தந்தை தாயின் பெயர் கண்ணம்மா என்று தானே கூறினார் என்று ஹேமா யேசி்க்கின்றார்.