ஐஸ்வர்யாவின் ஆடம்பரத்தால் அவமானப்படும் கண்ணன்! துரோகம் செய்த ஐஸ்வர்யா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கடன் தொல்லையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பியின் ஒற்றுமையை கதையாக கொண்டுள்ளது. இதில் சமீபத்தில் ஒற்றுமையாக இருந்த குடும்பம் சுக்குநூறாக பிரிந்துள்ளது.
தற்போது ஜீவா மனைவி மீனாவுடன் தனது மாமனார் வீட்டிற்கு பிரிந்து சென்றுள்ள நிலையில், ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகின்றனர்.
இதில் ஐஸ்வர்யா தனிக்குடுத்தனம் வந்த பின்பு ஆடம்பரமாக வீட்டிற்கு தேவையான பொருட்களை தவணை முறையில் வாங்கி குவித்துள்ளார்.
கண்ணனின் சம்பளம் பெரும்பாலும் தவணை கட்டுவதற்கே சென்றுள்ள நிலையில், அன்றாட செலவுக்கு யூடியூப் சேனல் ஒன்றினை ஆரம்பித்து அதில் காணொளியினை வெளியிட்டு வருகின்றனர்.
நகையை கொடுக்க மறுத்த ஐஸ்வர்யா
மேலும் கிரெடிட் கார்டு மூலம் தேவைகளை சந்தித்து வரும் ஐஸ்வர்யா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியுள்ளதால், அங்கு பணம் கட்டுவதற்கு முடியாமல் தவித்த கண்ணனுக்கு கதிர் வந்து உதவி செய்துள்ளார்.
பின்பு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பின்பு செலவுக்கு பணம் இல்லாததால் ஐஸ்வர்யாவின் நகையை கண்ணன் கேட்டதற்கு தரமறுத்து தந்திரமாக பதில் அளித்து அனுப்பியுள்ளார்.
ஆனாலும் ஐஸ்வர்யாவிற்கு புதிதாக வாங்கிய கம்மலை அடகு வைத்து கண்ணன் செலவு செய்து வரும் நிலையில், கிரெடிட் கார்டுக்கு வட்டி மற்றும் முதல் கட்டவில்லை என்று கடன்கொடுத்தவர்கள் வந்து வீட்டில் சத்தம் போட்டுள்ளனர்.
அப்போது உடனே ஐஸ் தந்திரமாக கதிரிடம் கேட்கலாம் என்று கூறி கண்ணனை தூண்டி விடுகின்றார். கண்ணன் அண்ணனிடம் கேட்பதற்கு தயங்கி நிற்கும் சோக நிலை ஏற்பட்டுள்ளது.