சினேகாவின் மகளா இது?.. குடும்பமாக கொடுத்த ரியாக்ஷன் வீடியோ வைரல்
நடிப்பில் அம்மாவுக்கே டஃப் கொடுத்த சினேகா மகளின் ரீல்ஸ் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை சினேகா
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சினேகா.
இவர், 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து சினேகா விஜய் நடிப்பில் வெளியான Greatest of All Time படத்தில் நடித்திருந்தார்.
மகளுடன் ரீல்ஸ் செய்த சினேகா
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வரும் சினேகாவிற்கு ஆத்யந்தா எனும் பெயரில் மகள் இருக்கிறார்.
அவர் ட்ரெண்டிங் பாடலுக்கு செய்த ரீல்ஸ் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுமாராக 3 வயது மதிக்கத்தக்க சிறுமி கொடுக்கும் ரியாக்ஷனா இது? என இணையவாசிகளை மிரண்டு போய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர், சினேகாவிற்கு தப்பாமல் பிறந்திருக்கிறார். அவர் போன்று முக ஜாடையும் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |