பாண்டியன் ஸ்டோர்ஸ்: கண்ணீரோடு வீட்டை விட்டு கிளம்பிய தனம்! பின்னர் நடந்தது?
வீட்டை விட்டு வெளியேறும் தனம் - மூர்த்தியை சத்தியம் வாங்கி வீட்டில் இருக்கச்சொல்லும் முல்லை. சூழ்ச்சியை அறிந்து திட்டும் கதிர் வெளியாகியுள்ள இன்றைய வாரத்திற்கான ப்ரோமோ காட்சி .
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது குடும்பம் மூன்றாக பிரிந்து எல்லோரும் தனித்தனியே இருக்கின்றனர். முல்லையும் தனமும் மட்டும் தான் தற்போது வரை ஒன்றாக இருக்கிறார்கள் ஆனால் அவர்களையும் பிரிக்க திட்டம் போடுகிறார் முல்லையின் அம்மா.
கண்ணீருடன் பிரியும் தனம்
இந்நிலையில், தனமும் முல்லையும் தற்போது கர்ப்பமாக இருக்கின்ற நிலையில் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்கககூடாது என்று சொல்லி தனத்தை வீட்டை விட்டு வெளியே போகுமாறு சொல்கிறார் முல்லையின் அம்மா.
இந்த விடயத்தை அழுதுக் கொண்டே தனம் மூர்த்தியிடம் சொல்ல மூர்த்தியும் குழந்தையைக் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போகின்ற போது எதிரில் கதிரும் முல்லையும் வர எங்கே போறீங்க என்று கேட்க அம்மா வீட்டுக்குப் போவதாக சொல்கிறார்.
தன் அம்மாவால் ஏதோ பிரச்சினை நடத்திருக்கிறது என யூகித்துக் கொண்ட முல்லை வீட்டை விட்டு வெளியோ போகக் கூடாது என சத்தியம் வாங்கி விட்டார்.
இதைப் பற்றிக் கேட்க தனம் தான் எல்லாவற்றும் காரணம் போல திட்டிக் கொண்டிருக்கிறார் முல்லையின் அம்மா. இதனால் கோபமடைந்த கதிர் முல்லையின் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போகும் படி கோபத்தோடு திட்டியிருக்கிறார்.