பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிவாரா ஜீவா! விறுவிறுப்பான தருணங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்
சூடுபிடிக்கும் கதைக்களம் மொய் வைத்ததில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக பிரிந்துள்ளது.
மொய் வைத்ததில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாக பிரிந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்வும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இதில் நடிக்கும் நடிகர்கள் அனைரையும் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் என்றாலே குடும்ப ஒற்றுமை, அதில் நடக்கும் சிறிய சிறிய சண்டைகள் அதனை எவ்வாறு நாம் சரிச் செய்வது என்பதை கருவாகக் கொண்டு தான் நகர்த்தப்பட்டு வருகிறது.
வீட்டில் மூவரும் கர்ப்பமாக இருப்பதால் மீனா தான் இவர்களை தனியாக கவனித்து கொண்டு வருகிறார். இதனால் நாளுக்கு நாள் மீனாவின் வேலைகள் அதிகரித்து வருகிறது.
இதனை தொடர்ந்து கண்ணன் ஐசுவை திருமணம் செய்த பின்னர் கண்ணனின் ஆட்டம் வீட்டில் சூடுபிடித்துள்ளது.
இரண்டாக பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
இந்த நிலையில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மூர்த்திக்கு தெரியாமல் தனித்தனியாக மொய் வைக்க திட்டமிட்டுள்ளனர்.
மொய் பணத்தை கொடுத்து பெயர் எழுத சென்ற இடத்தில் கண்ணன், கதிர் ஆகிய இருவரும் தனித்தனியாக மொய் எழுதியுள்ளார்.
இதனை தவறாக புரிந்துக் கொண்ட ஜீவா எனக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் மனம் உடைந்து மூர்த்தி அவமானத்தில் தலைகுனிந்து நின்றுள்ளார்.
மேலும் அந்த வீட்டிற்கு “இனி நா வரமாட்டேன்” எனவும் ஜீவா கூறியுள்ளார்.