கடன் வாங்கி அவதிப்படும் கண்ணன்! மூர்த்திக்கு தெரியவந்த உண்மை... பரபரப்பான ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கடன் தொல்லையில் இருப்பதை அறிந்த மூர்த்தி கண்ணனை அழைத்து பேச நினைக்கின்றார்..
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பியின் ஒற்றுமையை கதையாக கொண்டுள்ளது. இதில் சமீபத்தில் ஒற்றுமையாக இருந்த குடும்பம் சுக்குநூறாக பிரிந்துள்ளது.
தற்போது ஜீவா மனைவி மீனாவுடன் தனது மாமனார் வீட்டிற்கு பிரிந்து சென்றுள்ள நிலையில், ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வருகின்றனர்.
இதில் ஐஸ்வர்யா தனிக்குடுத்தனம் வந்த பின்பு ஆடம்பரமாக வீட்டிற்கு தேவையான பொருட்களை தவணை முறையில் வாங்கி குவித்துள்ளார்.
கண்ணனின் சம்பளம் பெரும்பாலும் தவணை கட்டுவதற்கே சென்றுள்ள நிலையில், அன்றாட செலவுக்கு யூடியூப் சேனல் ஒன்றினை ஆரம்பித்து அதில் காணொளியினை வெளியிட்டு வருகின்றனர்.
மூர்த்திக்கு தெரிந்த உண்மை
மூர்த்தியுடன் இருந்து வெளியேறிய இவர்கள், தனியாக வசித்து வருகின்றனர். மேலும் ஆடம்பரமாக பல பொருட்களை வாங்கி குவித்துள்ள நிலையில், அடங்காத ஐஸ் மீண்டும் கண்ணனை கடனாளியாக்க திட்டமிட்டு வருகின்றார்.
இதனை தனம், முல்லை வழியாக அறிந்த மூர்த்தி நேரடியாக கண்ணனை வழியில் சந்திக்கின்றார். மூர்த்தி எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.