அன்னையாக ஜொலிக்கும் நடிகைகள்! அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்
மே மாதம் 14ஆம் திகதியான இன்று உலகெங்கிலும் அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றர். அன்னை என்பவள் எமக்கு உயிர்க்கொடுத்து உறவாக்கிக் கொண்டவள்.
அரவணைப்பு என்றாலே தாய் தான் என்று பெரியவர் முதல் சிரியவர் ஓடி சென்று அன்னையை அணைத்துக் கொள்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள்.
இந்த அன்னையர் தினத்தையொட்டி திரையில் ஜொலித்த பிரபலங்கள் யார் யார் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள் என்று பார்க்கலாம்.
ஜோதிகா
20 ஆண்டுகளாக சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வரும் ஜோதிகா. வாலி திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி அடுத்தடுத்து மாஸான நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானார். அப்படி நடிக்கையில் சூர்யாவுடன் காதல் மலர்ந்து திருமணமும் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் தியா எனும் மகளும் தேவ் எனும் மகனும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நடிக்கால் இருந்த ஜோதிகா 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது தொழிலும், பிள்ளைகளுக்கு நல்ல தாயாகவும் இருக்கிறார்.
ஷ்ரேயா சரண்
சிவாஜி, கந்தசுவாமி, ரெளத்திரம் மற்றும் பல திரைப்படங்களில் நடிகை ஷ்ரேயா சரண் தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவர் கடைசியாக 2018இல் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோசீவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு பெண்குழந்தையும் உள்ளது.
நயன்தாரா
சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரா வலம் வரும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் திருமணமான 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களானார். இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயரும் வைத்திருக்கிறார்.