நான் கல்யாணம் பண்ணா இந்த மாதிரி.. காதல் உண்மையை போட்டு உடைத்த சிம்பு
நடிகர் சிம்பு கல்யாணம் செஞ்சா இந்த மாதிரி பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மாநாடு படவிழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு அவரகள் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று நடந்த பட விழாவில் சிம்பு கலந்து கொண்டு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, முதலில் எனது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போதெல்லாம் நான் நடிக்கும் படம் ரிலீஸ் ஆக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது.
அந்த வகையில் மாநாடு படமும் நிறைய பிரச்சனை ஏற்பட்டது. எஸ்.ஜே. சூர்யா நடிச்சு பிச்சுட்டாங்க. எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து வேலை செய்ததில் மகிழ்ச்சி. யுவன் என்னோட நண்பர், எனக்கு இன்னொரு அப்பா மாதிரி, எல்லாமே அவர் தான்.
அது என்ன பாண்டிங் என்றே எனக்கு தெரியவில்லை. நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் சகித்து கொள்வார்.
நான் கல்யாணம் பண்ணினால் யுவன் நட்சத்திரத்தில் உள்ள பெண்ணை தான் பண்ணுவேன் என்று அவரது திருமண ஆசையை பகிர்ந்துள்ளார்.