ஜனனி அழகான ஆபத்து.. விமர்சர்களிடம் சிக்கிய பெண்... நடந்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற இலங்கை பெண் ஜனனியை அழகான ஆபத்து என விமர்சித்து வருகிறார்கள்.
ப்ரொமோ
பிக் பாஸ் சீசன் 6ல் 20 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கபட்ட நிலையில் இதில் சில தினங்களாக கடுமையான வாதத்தினை ரசிகர்கள் அவதானித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த விமர்சர்கள் ஜனனியை அழகான ஆபத்து என விமர்சித்து வருகிறாார்கள்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனலட்சுமி, ஜிபி முத்துவிடம் சண்டை போட்டதால் கடுப்பான ஜனனி பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஜனனி ஆர்மி
இதே வேளை இன்றையதினம் இந்த வீட்டில் யார் இருப்பதற்கு இல்லாமல் இருந்திருக்கலாம் என கமல் கேட்ட போது, ஜனனி முந்திக்கொண்டு தனலட்சுமிக்கு சிவப்பு கொடி கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ஒரு சில நெட்டிசன்ஸ், ஜனனி அழகான ஆபத்து, அமைதியா இருந்து மனதில் வஞ்சம் வைக்கும் குணம் என விமர்சித்து வருகின்றனர்.
தொடர்ந்து பிக் பாஸ் வந்ததும் ஜனனி ஆர்மி தொடங்கிவிட்டதால் இவர் அந்த தைரியத்தில் இப்படி இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.