தனலட்சுமி சொன்ன ஒற்றை வார்த்தை... கலங்கி அழுத ஜிபி முத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் அடையாளத்துடன் கலந்துகொண்டுள்ள தனலட்சுமி, ஜிபி முத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரது ஆர்மியினர் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 10 பெண் போடியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 1 திருநங்கை என மொத்த 20 பேர் கலந்துகொண்டுள்ளனர். ஆரம்பத்தில் கலகலப்பாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக சண்டையும் ஆரம்பித்துள்ளன.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளர் என்றால் அது ஜிபி முத்து தான். அவருக்கென ஆர்மி தொடங்கி, டுவிட்டரில் டிரெண்டாகும் அளவுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில் தற்போது அவரையே அழவைத்துள்ளார் பொதுமக்கள் அடையாளத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள தனலட்சுமி.
என்ன பிரச்சனை?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் ஜிபி முத்து, ஆயிஷா, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர்.
இதில் உள்ள ஆயிஷா, ஜனனியால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டின் வெளியில் உள்ள வாழைப்பழ பெட்டில் தான் தூங்க வேண்டும் என பிக்பாஸ் உத்தரவிட்டார்.
இதையடுத்து நடைபெற்ற டாஸ்கின் அடிப்படையில் ஆயிஷா, ஜிபி முத்துவை நாமினேட் செய்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம், ஜிபி முத்து பிற அணியினருக்கும் வேலை செய்கிறார் என்பது தான்.
இதனால் கடுப்பான ஜிபி முத்து வெளியில் அமர்ந்து சக ஆண் போட்டியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜனனியும், ஆயிஷாவும், அவரிடம் பேச முற்படும் போது, தயவு செஞ்சி நீங்க பிறகு வாங்க என சொன்னார்.

தனலட்சுமி கூறிய வார்த்தை
உடனே தனலட்சுமி, அவர் எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறாரு என சொல்ல, அவர்கள் இருவரும் தான் மன்னிப்பு கேட்ட பின்னரும் முறைத்ததாக கூறினார் ஜிபி முத்து.
பின்னர் நாங்கள் முறைக்கவே இல்லை என வாக்குவாதம் செய்த தனலட்சுமி, ரொம்ப நடிக்காதீங்க என சொன்னதும், செம்ம டென்ஷன் ஆன ஜிபி முத்து, நான் நடிக்கிறேன்னு நீ பாத்தியா என கேட்க வாக்குவாதம் முற்றியது.
பின்னர் டைனிங் ஏரியாவில் அமர்ந்திருந்த போது இதை நினைத்து கண்கலங்கி அழுதார் ஜிபி முத்து. இதைப்பார்த்த சக போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவியதை அடுத்து, தலைவரே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் என சமூக வலைதளங்களில் ஜிபி முத்துவுக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி உள்ளே ஒரு இடத்தில் நிவாஷினி உடன் பேசுகையில், ஜிபி முத்தா, அந்த ஆளு ஒரு லூசு என கூறி உள்ளார் தனலட்சுமி. அந்த வீடியோவை பகிர்ந்து யார் லூசுனு கமல் சார் வர்றப்ப தெரியும் என ஜிபி முத்து ஆர்மியினர் கூறி வருகின்றனர். இதைப்பார்த்தால் கன்பார்ம் முதல் எலிமினேசன் தனலட்சுமி தான் என்பது போல் தெரிகிறது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        