6 இலட்சம் ரூபாய்க்கு பார்ஸல் செய்யப்பட்ட இட்லி: கேட்டால் இட்லி ப்ரியராம்!
பொதுவாகவே சிலரது வீடுகளில் இட்லி, தோசைதான் பிரதான உணவாக இருக்கும். இட்லி என்றால் இந்திய நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் விருப்பமான காலை உணவாக இட்லி பார்க்கப்படுகிறது.
இட்லி எளிதில் ஜீரணிக்கக்கூடிய ஆரோக்கியமான காலை உணவு. இந்நிலையில் நேற்றைய தினம் மார்ச் (30) உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது, இது 2015ஆம் ஆண்டு தொடங்கிய பாரம்பரியம் ஆகும்.
இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் லட்ச கணக்கான ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டிருக்கிறார் ஒருவர். இந்த சம்பவம் தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
இலட்சம் ரூபாய்க்கு பார்ஸல் செய்யப்பட்ட இட்லி
இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தென்னிந்திய இட்லிக்காக அதிகம் ஆசைப்பட்டு 6 இலட்சம் ரூபாய்க்கு இட்லி பார்சல் செய்யப்பட்டதாக முன்னணி உணவு-விநியோக தளமான ஸ்விகி நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
The user ordered 8,428 plates of Idlis including orders placed for friends and family, while travelling across cities like #Bengaluru and #Chennai.
— IANS (@ians_india) March 30, 2023
இவர் கடந்த 12 மாதங்களில் அவர் 8,428 பிளேட் இட்லி ஆர்டர் செய்ததாக ஸ்விகி தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் மாத்திரம் 6 லட்சம் மதிப்புள்ள இட்லிகள் ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அதிகமாக புது புது வகையான உணவுகள் ட்ரெண்டாகி வருகின்ற வேளையில் இட்லி ப்ரியர் ஒருவரின் இந்த ஆசை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.