பழைய நாணயத்திற்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்குமா?.. பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
பழைய பொருட்களை சேகரிப்பது என்பது பலருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவே வணிகமாக இருக்கும். பலரும் பழங்காலத்து பொக்கிஷங்களை தங்கள் வீட்டில் வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் சில சமயங்களில் அவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபமும் கிடைக்கிறது. ஓல்டு இஸ் கோல்டு என்ற பழமொழிக்கு ஏற்ப, உண்மையிலேயே பழைய நாணயங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என அடிக்கடி படிப்பது உண்டு? ஆனால் உண்மையிலேயே இது சாத்தியமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
லட்சக் கணக்கில் தொகை கிடைக்கும்
தற்போது வைரலாகி வரும் செய்திகளில் பழைய 1, 2 காசுகளுக்கும், ரூ.1,2,5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுகளையும், அவற்றை ஏலத்தில் விடுவதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். எனினும் எல்லா பழைய நாணயங்களும், பழைய ரூபாய் நோட்டுகளுக்கு இந்த அளவு தொகை கிடைக்காது. அதற்கென சில நிபந்தனைகளும் உண்டு.
என்னென்ன அம்சம் இருக்க வேண்டும்?
உதாரணத்திற்கு மாதா வைஷ்ணோ தேவியின் புகைப்படத்துடன் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் நீங்கள் அதிக அளவு சம்பாதிக்கலாம். இந்த குறிப்பிடத்தக்க நாணயங்கள் கடந்த 2002ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. மாதா ராணியின் புகைப்படம் ஒரு புனிதமான மற்றும் அதிர்ஷ்டமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஆக பலரும் இந்த நாணயத்தினை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நாணயங்களை வாங்க 10 லட்சம் ரூபாய் வரை செலவிட ஆர்வலர்கள் தயாராக இருப்பதாக DNA செய்திகள் கூறுகின்றது.
1 ரூபாய் நோட்டு தேவை
இந்த 1 ரூபாய் நோட்டு 1957ம் ஆண்டு அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம் பட்டேலின் கையெழுத்து இருக்க வேண்டும். அதே வரிசை எண் 123456 என்ற வரிசை எண் இருக்க வேண்டும்.
ஓஎன்ஜிசியின் காயின்
ஓஎன்ஜிசியின் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களுக்கும் அதிக தொகை பெற முடியும் என்ற கருத்தும் நிலவி வருகின்றது.
இது தவிர முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி சுப்பாராவ் கையெழுத்திட்ட 000786 என்ற எண் கொண்ட 100 ரூபாய் நோட்டுகளுக்கு அதிக தேவை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
10 ரூபாய் நோட்டு
மேலும் 1943 வருடம் பொறிக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சிடி தேஷ்முக் மற்றும் அசோகா பில்லர் ஆகியோர் கையெழுத்திட்ட,10 ரூபாய் தாளுக்கும் தேவை உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு பக்கத்தில் படகும் மறுபுறம் அசோக பில்லரும் இருக்க வேண்டும் எனவும், அப்படி இருந்தால் அதன் மூலாம் 25,000 ரூபாய் வரையில் சம்பாதிக்க உதவும் என கூறப்படுகிறது.
ஏலத்தில் விடலாம்
இந்த அரிய வகை நோட்டுகள், காயின்கள் உங்களுக்கு கிடைத்தால் அவற்றை நீங்கள் பழைய பொருட்கள் மற்றும் நாணயங்களை ஏலத்தில்; விடும் இணையதளங்கள் பல உள்ளன. அவற்றில் உங்களிடம் உள்ள காயின் அல்லது நோட்டுகளை போட்டு எடுத்து பதிவேற்றம் செய்யலாம். அவை தேவை இருக்கும்பட்சத்தில் உங்களால் அதன் மூலம் சம்பாதிக்க முடியும்.
லட்சக் கணக்கில் விற்பனையா?
மேலும் மேற்கண்ட இந்த நாணயங்களுக்கு தேவை உள்ளது. இதனால் இந்த நாணயங்கள் லட்சக் கணக்கில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனினும் ஒவ்வொரு நாணயங்களுக்கும் சில நிபந்தனைகளும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு ஒவ்வொரு நாணயங்களும் லட்சக்கணக்கில் விலை போகும் என்பது தவறான விஷயம். மேற்கண்ட நிபந்தனைகளுடன் பொருந்தினால் உங்களது நாணயங்கள் நல்ல விலைக்கு போகலாம்.