செல்போனிலேயே மூழ்கிக்கிடந்த இளம்பெண்.. பறிபோன பார்வை.. மருத்துவரின் '20-20-20' அட்வைஸ்
இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்போன் அதிகமாக பயன்படுத்திய காரணத்தினால் கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்துள்ள மருத்துவரின் பதிவு வைரலாகி வருகின்றது.
அதிகரிக்கும் செல்போன் பாவிப்பு
சமீப காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனிற்கு அடிமையாவதுடன், அதிகமான நேரத்தினை அதற்கு செலவிட்டும் வருகின்றனர். இவை கண்பார்வை பாதிக்கும் என்று அறிந்தும் அதற்கு இவ்வாறு அடிமையாகிச் செல்வது வேதனைக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவரின் பதிவு வைரலாகியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் சுதீப் குமார். இவரிடத்தில் மஞ்சு என்ற இளம்பெண் சிகிச்சைக்கு வந்துள்ளார்.
குழந்தையை பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்ட அப்பெண் வீட்டிலே இருந்து குழந்தையைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனையும் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதுடன், வெளிச்சம் இல்லாத அறையில் செல்போனை அதிகமாக பயன்படுத்தியுள்ளார்.
இவருக்கு சில நேரங்களில் பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் எதையுமே பார்க்கமுடியாத அளவிற்கு சென்றுள்ளது. இவரை பரிசோதித்த கண் மருத்துவர் மூளை நரம்பியல் நிபுணரான கதிரை சந்திக்கக் கூறியுள்ளார்.
சில ஆலோசனைகளை வழங்கிய அந்த மருத்துவர், மஞ்சுவுக்கு ஸ்மார்ட் போன் விஷன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடு ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளார்.
தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க கூறியதுடன், அவருடைய ஆலோசனையின் படி தற்போது பூரண குணமாகியுள்ளார் மஞ்சு. மேலும் கணினிகளில் அதிக நேரத்தினை செலவிடுபவர்களையும் எச்சரித்துள்ளதுடன், சில ஆலோசயையும் கொடுத்துள்ளார்.
அதாவது 20 நிமிடங்கள் போனை பயன்படுத்தினால் அடுத்த 20 நிமிடம் ஓய்வெடுக்கவும், அப்போது 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளார். இந்த மருத்துவரின் 20-20-20 ரூல் என்கிறார்கள் மருத்துவர்கள்.