Neeya Naana: லோன் எடுத்து குடிப்பது நியாயமா? புதுமாப்பிள்ளை வெளுத்து வாங்கிய கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் Party என்ற பெயரில் நபர் ஒருவர் கடன்காரராக நிற்கும் நிலையில், கோபிநாத் தனது சரியான பதிலை கொடுததுள்ளார்.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் Party அதிகம் செய்யும் கணவர்கள் மற்றும் கோபப்படும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பார்ட்டி என்ற பெயரில் கணவர் செய்யும் செயலை நினைத்து மனைவிகள் மனம் வருந்தியுள்ளனர். மேலும் பார்ட்டிக்காக வாங்கிய கடனையும் தற்போது வரை அடைக்காமல் உள்ளதாக கூறியுள்ளார்.
திருமணமாகி சில மாதங்களே ஆகும் நிலையில், கணவர் பிரைவட் லோன் ஆப் மூலம் கடன் வாங்கி நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
இதனால் தற்போது வாங்கும் சம்பளத்தில் பாதி அந்த கடன் அடைப்பதற்காக சென்றுவிடுவதாக குறித்த பெண் கூறியுள்ளார்.
குறித்த நபருக்கு கோபிநாத்தும் தனக்கு தெரிந்த கருத்துக்களையும், அட்வைஸையும் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |