பிக் பாஸில் இந்த வாரம் பிரியப்போகும் காதல் ஜோடிகள்! நோமினேஷன் Free pass யாருக்கு?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற உள்ள எவிக்ஷனில் எந்த போட்டியாளர் போட்டியை விட்டு வெளியேறி செல்லப்போகிறார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ் எவிக்ஷன்
தற்போது அதிக மக்களால் பார்க்கப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 8 வது சீசன் அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது 65 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வாரத்தின் இறுதியில் ஒரு போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி செல்வார்.
கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது. அதில் சாச்சனா மற்றும் ஆனந்தி எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் மற்றும் மேனேஜர்கள் டாஸ்க் நடைபெற்றது.
இதில் தொழிலாளர்கள் வேலை செய்தால் தான் வீட்டுக்கு தேவையான தண்ணீர், கேஸ் ஆகியவை கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. இந்த டாஸ்கின் முடிவில் மேனேஜர்கள் அணியில் இருந்து சிறந்த போட்டியாளராக ஜெஃப்ரியை தேர்வு செய்து நாமினேஷன் ஃப்ரீ பாஸும் வழங்கப்பட்டது.
இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி இந்த வார நாமினேஷனில் 9 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் பவித்ரா, செளந்தர்யா, ஜாக்குலின், அருண் ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர்கள் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.
அந்த வகையில் தர்ஷிகா மற்றும் விஜே விஷால் தான் இந்த வார ஓட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தால் இவர்கள் இருவர் தான் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
இதில் ஒருவர் மட்டும் வெளியேற வேண்டும் என்றால் அது கண்டிப்பாக தர்சிக்கா தான் என தகவல் வெளியாகி உள்ளது. இதை இந்த வார எபிசோட்டில் உறுதி செய்ய முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |