இட்லி, தோசை இல்லாத சத்தான காலை உணவாக இதை சாப்பிடுங்கள்
ஒருநாளைக்கு நமக்கு தேவையான சக்தி அளிப்பது காலை உணவு தான், அன்றைய தினம் முழுவதுமே சுறுசுறுப்பாக இயங்க காலை உணவு அவசியமாகிறது.
”காலை உணவை தவிர்க்க வேண்டாம், ஏராளமான நோய்கள் அண்டிக்கொள்ளும்” என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்லிக்கேட்டிருப்போம்.
இட்லி, தோசையாக அல்லாமல் ஆரோக்கியமான காலை உணவாக எதை எடுத்துக்கொள்ளலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொங்கல்
பொங்கல் சாப்பிட்டாலே தூக்கம் வரும் என பலரும் காலையில் சாப்பிடத்தயங்கும் உணவு பொங்கல், ஆனால் உண்மையில் பொங்கல் ஆரோக்கியமான ஒன்று.
அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியால் மந்தத்தன்மை ஏற்படுகிறதே தவிர பொங்கல் புரோட்டின் சத்துக்கள் நிறைந்தது.
வெண் பொங்கல், மிளகு பொங்கல், சிறுதானிய பொங்கல் என பலவிதமான பொங்கலை தேங்காய் சட்டினியுடன் ருசித்து சாப்பிடலாம்.
பூரி
மைதாவை சேர்க்காமல் கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பூரி, உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
ஏனெனில் கோதுமையில் உள்ள கார்போஹைட்ரேட்டும் புரோட்டீனும் நம் உடலுக்குச் சக்தியை கொடுக்கும்.
உருளைக்கிழங்கில் உள்ள புரோட்டீன் சத்து, ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்கும்.
காய்கறிகள் சேர்த்த உப்புமா
உப்புமா என்றாலே அலறி ஓடும் நபர்களுக்கு மிகவும் ருசியாக காய்கறிகள் சேர்த்த உப்புமாவை செய்து கொடுக்கலாம், அதிலும் கடைசியாக நெய் சேர்த்துக் கொண்டால் தனி ருசி தான்.
புரோட்டீன், தாது, கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, டி ஆகிய சத்துக்கள் நிறைந்த தேங்காய் சட்டினியுடன் உப்புமாவையும் சேர்த்துக் கொண்டால் நல்லது.