வாட்ஸ்ஆப்பில் உங்களுக்கு இப்படியான மெசேஜ்கள் வருகின்றதா? அப்போ கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க!
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.
இவ்வாறு இந்த புதிய புதிய வசதிகளையும் தொழிநுட்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு சில மோசடிக்காரர்கள் மோசடி வேலைகளில் இறங்கி வருகிறார்கள்.
வேலைவாய்ப்பு மோசடி
வாட்ஸ்ஆப்பிள் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி தற்போது அதிக மோசடிகள் நடத்துக் கொண்டிருக்கிறது. அதில், வாட்ஸ்ஆப்பிள் ஒரு மெசேஜ் அனுப்பி நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கவர்ச்சிகரமான சம்பளம் தரப்படுவதாகவும் தெரிவித்து மோசடி செய்து வருகின்றனர்.
அவர்கள் அவர்களின் மெசேஜானது, "அன்புள்ள நீங்கள் எங்கள் நேர்காணலில் தேர்ச்சி பெற்றுள்ளீர்கள், ஊதியம் ரூ. 8000/நாள். கலந்துரையாடல் விவரங்களைத் தொடர்பு கொள்ளவும்: wa.me/919165146378 SSBO."
இவ்வாறான மெசேஜ்களை வெவ்வேறு எண்களில் இருந்து அனுப்பி வருகின்றார்கள். இவர்கள் நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் 20 முதல் 29 வயதைச் சேர்ந்த இளைஞர்களை தான் அதிகம் குறிவைத்து மோசடி செய்யப்படுவதாக நிறுவனம் ஒன்று கூறி வருகின்றது.
அவர்கள் மெசேஜில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க், உங்கள் டேட்டாவை திருட ஃபிஷி இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும். இதன் போது மோசடி செய்பவர்கள் உங்களிடமிருந்து மற்ற விவரங்களைக் கேட்பார்கள்.
இதனால் எந்த நிலையிலும் உங்கள் விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்க டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு சில உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளது.
ஒரு வலைப்பதிவு இடுகையில், வேலை வாய்ப்புகள் என்ற பெயரில் சைபர் கிரைமினல்கள் இளைஞர்கள், படித்த குடிமக்களை குறிவைப்பதாக பிரிவு கூறுகிறது. அவர்கள் Naukari.com மற்றும் shaine.com போன்ற இணையதளங்களில் இருந்து வேலை தேடுபவர்களின் பயோ-டேட்டா அல்லது CV பெறுகிறார்கள்.
செல்போன் எண், மின்னஞ்சல், கல்வித் தகுதி, சிவியில் கொடுக்கப்பட்டுள்ள கடந்தகால வேலைவாய்ப்பு விவரங்களைப் பயன்படுத்தி, பிரபல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி மக்களை குறிவைக்கின்றனர்.