யூடியூப் வீடியோவால் மோசடி: கவனக்குறைவாக காணாமல் போகும் பணம்
இப்போதெல்லாம் மோசடிகளும் மோசடிக்காரர்களும் அதிகரித்து விட்டனர், இதனால் மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது அனைத்திற்கும் இணையவழி என்றாகி விட்டது அதனால் தற்போது இணையத்தில் இருந்து ஒரே ஒரு மொபைல் போனை வைத்துக் கொண்டு மோசடி வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த இணையவழியில் அதிக இலாபம் பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இணையத்தின் முக்கிய வளர்ச்சியே க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் செலுத்தும் புதிய செயன்முறையும் இருக்கிறது.
இதில் பல இணையவழி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், தற்போது சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் யூடியூப் வீடியோவை வைத்து ஆரம்பித்திருக்கிறார்.
இணையத்தில் பறிபோகும் பணம்
யூடியூப் வீடியோ பார்த்தால் உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யபட்டு நம் பணம் எல்லாம் பறிப்போகும் என்று கேள்விபட்டிருப்போம், ஆனால் அந்தத் தகவல்கள் எல்லாம் உண்மையா என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
ஆம், இந்த தகவல் முற்றிலும் உண்மையான விடயம், ஆனால் கவனக்குறைவாக இருந்தால் மட்டுமே இப்படி நம் பணம் காணாமல் போகும் வாய்ப்பிருக்கிறது.
இந்த மோசடிக்காரர்கள் புத்திசாலித்தனமாக கணினி அல்லது செல்போனில் இருந்து முக்கியமான நிதி தரவுகளை திருடுகிறார்கள்.
யூடியூப் வீடியோக்களைப் பதிவேற்றுவது மற்றும் அவற்றில் குறிப்பிட்ட மால்வேர் இணைப்புகளை இணைப்பதன் மூலம் இந்த திருட்டு சம்பவங்களை நடத்துகிறார்கள்.
AI இணைய-பாதுகாப்பு நிறுவனமான CloudSEK இன் ஆராய்ச்சியின்படி, சமீபத்திய காலங்களில் YouTubeல் மால்வேர் இணைப்பு கொண்ட வீடியோக்கள் 200 முதல் 300 மடங்கு அதிகரித்துள்ளன.
இந்த இணைப்பானது போலி இணையதளங்கள், பதிவிறக்கங்கள் மற்றும் யூடியூப் டுடோரியல்கள் மூலம் பயனர்களின் கணினிகளுக்குள் நுழைந்து நமது வங்கிக் கணக்கை ஒட்டுமொத்தமாக காலி செய்யப்படுகிறது.
இலவசமாக ஏதேனும் டவுன்லோட் செய்துக் கொள்ள யூடியூப் செல்பவர்களை வலை விரித்து பிடித்து விடுகின்றனர் இந்த மோசடிக்காரர்கள்.
கவர்ந்து இழுக்கும் வீடியோக்களை கொடுத்து கீழே இருக்கு லிங்க் எனவும் கொடுக்கிறார்கள். அதனை க்ளிக் செய்து பார்த்தால் மொத்த பணமும் இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு வரும் யூடியூப் வீடியோக்களை நம்பி எந்த ஒரு லிங்கையும் க்ளிக் செய்யாமல் இருப்பதே இதில் இருந்து தப்பிக்க சிறந்த வழி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.