Tamizha Tamizha: தீ சட்டி எடுக்க வைத்து தாய் செய்த கொடுமை... அரங்கத்தில் புலம்பிய மகன்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பக்திமான் பெற்றோர்கள் மற்றும் பகுத்தறிவு பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் பக்திமான் பெற்றோர்கள் மற்றும் பகுத்தறிவு பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வரவழைத்து நேர்த்திக் கடன் என்ற பெயரில் செய்த கொடுமையை விளக்கியுள்ளனர்.
இளைஞர் ஒருவர் தன்னை திடீரென கையில் வேப்பிலையைக் கொடுத்து தீ சட்டி எடுக்கவும், தீ மிதிக்கவும் செய்தனர் என்று ஆதங்கத்தில் கூறினார். இதற்கு தாய் கூறிய பதில் அரங்கத்தையே சிரிக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |