பிளாஸ்டிக் குப்பைக்கு இலவச சாப்பாடு கொடுக்கும் ஹோட்டல்- எங்க இருக்கு தெரியுமா?
மனிதர்கள் உயிர் வாழ உணவு மிகவும் அவசிமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இந்த உலகில் எந்த மூலையில் ஹோட்டல் வைத்தாலும் உணவின் சுவையும், தரமும் நன்றாக இருந்தால் சிலர் எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் தேடி போய் வாங்கி சாப்பிடுவார்கள்.
அதிலும் குறிப்பாக சாப்பிடும் சாப்பாட்டிற்கு காசு கொடுக்க தேவையில்லை என்றால், அங்கு கூட்டம் அலை மோதும். அப்படி சாப்பிடும் உணவுக்கு காசு வாங்காத ஒரு கஃபே ஒன்று இந்தியாவில் உள்ளது இந்த ஹோட்டல் சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் மாவட்டத்தில் உள்ளது.
இந்த ஹோட்டல் “Garbage Cafe” எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு சென்று நாம் பிளாஸ்டிக் கழிவுகள் அல்லது பிற பொருட்களை வழங்கினால் இலவச உணவு வழங்குகிறார்களாம்.
அந்த வகையில், “Garbage Cafe” பற்றி மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஹோட்டலின் நோக்கம்
Garbage Cafe என அழைக்கப்படும் ஹோட்டலின் நோக்கம் மக்களின் பசியை ஆற்றுவது மட்டுமின்றி, பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதும் தான். இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகவும் தூய்மையான நகரங்களுள் ஒன்றான அம்பிகாபூர், அந்த நகரத்தை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாறியுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக இந்த ஹோட்டல் பார்க்கப்படுகின்றது.
சாப்பாட்டின் தன்மை
அறிக்கைகளின் படி, “ Garbage Cafe-ல் ஒருவர் 1/2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை வழங்கினால் காலையுணவு இலவசமாக சாப்பிடலாம். அந்த ஹோட்டலில் காலையுணவாக ஆலு சாப், இட்லி, சமோசா, பிரட் சாப் போன்ற உணவுகள் வழங்கப்படுகின்றன.
அதே போன்று 1 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கொடுத்தால் இலவசமாக மதிய உணவு சாப்பிடலாம். மதிய உணவாக 4 ரொட்டிகள், 2 வகையான காய்கறிகள், 1/2 கப் சாதம், தால், சாலட், தயிர், ஊறுகாய், மற்றும் அப்பளம் ஆகியன கொடுக்கப்படுகின்றன.
சில சமயங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் எதுவும் இல்லாமல் வந்து உணவு கேட்டால் குறைந்த விலையில் உணவு கொடுக்கப்படுகின்றது. அந்த உணவில் காய்கறிகள், சாதம், தால், ஊறுகாய் மற்றும் சாலட் ஆகியன உள்ளன.
சாப்பாட்டின் விலை விவரங்கள்
இங்கு ஒரு சாப்பாட்டின் விலை ரூ.40 ஆகவும், ரூ. 50 தாலியில் 2 வகையான காய்கறிகள், 4 ரொட்டிகள், தால், சாதம், சாலட், அப்பளம், ஊறுகாய் போன்றவை இருக்கும்.
அதே போன்று ரூ.70 தாலியில் பன்னீர் மசாலா, 2 வகையான காய்கறிகள், சாதம், தால், ஊறுகாய் மற்றும் சாலட் போன்ற உணவுகள் இருக்கும்.
இந்த முயற்சிக்கு அந்த பகுதியில் இருக்கும் மக்கள் பலத்த ஆதரவு வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |