ஆப்பிள் பயனர்கள் இனி whatsapp-ல் இந்த ஆப்ஷனை பயன்படுத்த முடியுமாம்
whatsapp நிறுவனம் ஆப்பிள் பயனர்களுக்கு சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
Picture-in-Picture , Group Description மற்றும் Subjects போன்ற பல்வேறு புதிய அம்சங்களை whatsapp நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த பிச்சர் மோட் ஊடாக வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் இருந்து கொண்டு மல்டி டாஸ்கிங் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
whatsapp நிறுவனம் ஒவ்வொரு மாதமும் அனேகமாக ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் மற்றும் பயனர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது.
புதிய அப்டேட்கள் ஊடாக சில அம்சங்கள் அடிக்கடி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிச்சர் இன் பிச்சர் மோட் ஊடாக வீடியோ அழைப்பில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே பயனர் ஒருவர் வேரும் அப்ளிகேஷன்களை திறந்து அவற்றை செயற்படுவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
23.3.77 என்னும் புதிய வர்ஷனில் இந்த பிக்சர் இன் பிக்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அழைப்பில் இருந்து கொண்டு வேறும் டாஸ்க்க்களை செய்யக்கூடிய வசதி உருவாகியுள்ளது.
இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ் இல் எவ்வாறு பிக்சர் இன் பிக்சர் மோட் பயன்படுத்துவது?
நீங்கள் வீடியோ அமைப்பில் இருக்கும் போது எக்ஸிட் ஆகினால் தானாகவே பிக்சர் இன் பிச்ச மோட் செயற்படத் தொடங்கிவிடும்.
வீடியோ அழைப்புகளை Close செய்யவும், Hide செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பிக்ச்சர் இன் பிச்ச அமௌன்ட் தொழிற்படவில்லை என்றால் உங்கள் whatsapp வர்ஷனை அப்டேட் செய்யவும் அனைத்து பர்மிஷன் செட்டிங்கலும் எனேபிள் செய்யப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
இது தவிர வேறு சில புதிய அம்சங்கள் ஆப்பிள் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக Captions for documents என்னும் அம்சத்தை குறிப்பிடலாம், ஏதேனும் ஒரு டாக்குமென்டை அனுப்பும்போது பயனர்கள் அதற்கு ஒரு கேப்ஷனை இட்டு அனுப்பக்கூடிய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் குழு விபரங்கள் அல்லது சப்ஜெக்ட்களை விவரிப்பதற்கு கடந்த காலங்களில் 512 எழுத்துக்களுக்கள் என்ற வரையறை காணப்பட்டது, தற்பொழுது 20048 எழுத்துக்கள் வரையில் இந்த விபரிப்பு களுக்காக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.