ஒரே ஒரு போன்: ஒரு லட்சம் க்ளோஸ்! நடிகையிடம் பணம் பறித்த கும்பல்!
பிரபல நடிகையின் வங்கிக் கணக்கில் இருந்து மர்ம நபர்களால் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை நக்மா
தமிழ் சினிமாவின் 90களில் முன்னணி நாயகியாகவும் பலரின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை நக்மா.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி என பல மொழி திரைப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நடித்தவர்.
இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்.
பணப்பறிப்பு
சமீபத்தில் இவருக்கு செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த மெசேஜ் கொடுக்கப்பட்டு இருந்த லிங்கை செய்தவுடன் அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில் KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.
இதனை நம்பிய நடிகை லிங்கை கிளிக் செய்ய, அடுத்தக் கணமே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது போல் குறுஞ்செய்திகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தன.
அப்போது சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடியுள்ளனர்.
இது தொடர்பில் அவர் சைபர் க்ரைம் பொலிஸாருடன் புகார் கொடுத்திருக்கிறார்.